Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லெட்சுமிபுரம் கிராமத்துக்கு புதிய குடிநீர் திட்டம்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராமத்திற்கு புதிய குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த ராட்சத கிணற்றால் தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக, சுமார் 25 நாள்களாக போராட்டம் நடத்தினர்.

இதனால், ஓ.பன்னீர்செல்வம் அந்த கிணற்றை தனது நண்பர் பெயருக்கு எழுதிவைத்துவிட்டார். இந்த கிணறு விவகாரம் இன்று வரை ஒரு முடிவை எட்டாத நிலையில், இன்று இக்கிராமத்திற்கு புதிய குடிநீர் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. 

தேனி மாவட்டம் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து சுமார் 12கி.மீட்டர் தூரத்தில் உள்ள லெட்சுமிபுரத்திற்கு தண்ணீர் கொண்டுவருவதே இந்த புதிய திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 62லட்சம் ரூபாய். இதில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 33 லட்சம் ரூபாயும், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து 29 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் தேவைப்படும் பட்சத்தில் தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்கள் தெரிவித்தனர். குடிக்கத் தண்ணீர் கிடைத்துவிடும் என்றாலும், எங்கள் விவசாயத்திற்கு எதிரியாக இருக்கும் அந்த கிணற்றை மீட்காமல் ஓயப்போவதில்லை என்கிறார்கள் லெட்சுமிபுரம் கிராம மக்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close