Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"கரூரில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அரசு விழாவாகக் கொண்டாடப்படும்"

'கரூர் மாவட்டத்தில், இனி ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்' என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

   


 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், திருகாம்புலியூர் ஊராட்சியில் உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் அருகே நடந்த ஆடிப்பெருக்கு நிறைவு விழாவில், ஆட்சியர் கோவிந்தராஜ் கலந்துகொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசுத்துறைகளின் சிறந்த அரங்குகளுக்குப் பரிசு வழங்கினார்.

அப்போது பேசிய அவர், 'கரூர் மாவட்டத்தில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இங்கே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 49.22 லட்ச ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, 22 அரசுத் துறைகள் சார்பில் பொதுமக்கள் பார்த்துப் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதை, அதிக அளவில் பொதுமக்கள் பார்த்து ரசித்துப் பயன்பெற்றனர். அனைத்து அரங்குகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
மேலும், அரசு அலுவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், இங்கு கபடி, உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூடவே, மக்களை மகிழ்விப்பதற்காக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சுகாதாரத்துறையின் சார்பில், மருத்துவ முகாம் மற்றும் விழிப்புஉணர்வுக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், 458 நபர்களுக்கு நிலவேம்புக் கசாயமும் வழங்கப்பட்டது. 
இந்த ஆடிப்பெருக்கு விழா, இனி ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட, அரசு சார்பாக உள்ளூர் விடுமுறை விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா, கரூர் மாவட்டத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அதை பொதுமக்கள் பயன்படுத்தி, ஆடிப்பெருக்கு விழாவை வருடா வருடம் சிறப்பாகக் கொண்டாடி, அம்மா பூங்காவை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close