Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பந்தக்கால் நட்ட அமைச்சர்கள்! திருவாரூரில் கலகலக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

தமிழகத்தில், இந்தாண்டு முழுவதும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றாண்டு விழாவை அரசு நடத்திவருகிறது


இந்த வரிசையில், வரும் 19-ம் தேதி திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா நடைபெறும் மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராஜ், தங்கமணி, ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். முதலில் ஒன்பது அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 6 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

 இந்த நிகழ்ச்சிக்குப்  பின்னர், தஞ்சாவூர் கமலாலய குளம் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பள்ளி மாணவ-மாணவியர் பங்குபெறும் மாரத்தான் போட்டி  தொடங்கி நடைபெற்றுவருகிறது. 19 -ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்ள உள்ளார். அதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பணிகளை அதிகாரிகள் தீவிரமாகக் கவனித்துவருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close