Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலுங்கில் ரீமேக் ஆகும் 'அங்கமாலி டைரீஸ்'!

லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற படம், 'அங்கமாலி டைரீஸ்'. 89 புதுமுகங்களைவைத்து உருவான இந்தப் படத்தின் கதையை, செம்பன் வினோத் எழுதியிருந்தார். 

அங்கமாலி டைரீஸ்

வசூல்ரீதியிலும் விமர்சனரீதியிலும் பெரிய வெற்றியைப் பெற்றது, 'அங்கமாலி டைரீஸ்'. மொழிகள் தாண்டி சினிமா ரசிகர்கள் அனைவராலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. விரைவில் இந்தப் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தெலுங்கில் வெளியாக இருக்கும்  'வெள்ளிபோமாக்கே' படத்தில் நடித்த விஷ்வாக் சென், ஆண்டனி வர்கீஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் புதுமுகங்களை நடிக்கவைத்ததுபோலவே, தெலுங்கிலும் புதுமுகங்களைவைத்தே படமாக்க உள்ளனர். "படத்தில் நடிக்க வைக்க 80 புதுமுகங்களை ஆடிஷன்மூலம் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். தெலுங்கிற்கு ஏற்றார்ப்போல கதைக்களத்தை ஹைதராபாத் பகுதியில் நடப்பதுபோல மாற்ற இருக்கிறோம்" என இந்தப் படத்தைத் தயாரிக்கும் 'வன்மயே க்ரியேஷன்ஸ்' கூறியிருக்கிறது. படத்தின் இயக்குநர் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் முடிவுசெய்யப்பட இருக்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close