Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் கெடு இன்று முடிகிறது! ஓ.பன்னீர்செல்வம் திடீர் அழைப்பு

அ.தி.மு.க இரு அணிகளும் இணைய, டி.டி.வி.தினகரன் விதித்த கெடு இன்றுடன் முடியும் நிலையில், சென்னை வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீரென அழைப்பு விடுத்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டு அணிகளாகப் பிரிந்த அ.தி.மு.க-வை இணைக்கும் முயற்சியில், முதல்வர் பழனிசாமி அணியினர் முயன்றுவருகின்றனர். இரு அணிகளும் இணைய 60 நாள் கெடு விதித்தார் டி.டி.வி.தினகரன். இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, இரு அணிகளும் இணைய மேலும் அவகாசம் கொடுப்பதாகத் தெரிவித்த தினகரன், கட்சிப் பணியாற்றப்போவதாக அறிவித்தார்.

தினகரனின் இந்த அதிரடி முடிவு, பழனிசாமி அணியை அதிரவைத்தது. இதையடுத்து, கட்சியும் ஆட்சியும் பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடந்துவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதற்கு, தினகரனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஜெயக்குமாரைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி (நாளை) ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவிருப்பதால், தொண்டர்கள் அனைவரும் வர வேண்டும் என்று தினகரன் அழைப்பு விடுத்தார். தினகரனின் இந்தத் திடீர் அறிவிப்பு, பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. இதனிடையே, தினகரனின் கெடு இன்றுடன் முடிவடைகிறது. கட்சியும் ஆட்சியும் யார் கைப்பற்றப்போகிறார்கள் என்ற பரபரப்பு தற்போது அ.தி.மு.க அணிகளுக்குள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் நாளை சென்னைக்கு வருமாறு ஓ.பன்னீர்செல்வம் திடீரென இன்று அழைப்பு விடுத்துள்ளார். அணிகள் இணைப்பு, தமிழக அரசியல் சூழல்குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் இந்தத் திடீர் அழைப்பு, தினகரன் மற்றும் பழனிசாமி அணியினரை அதிரவைத்துள்ளது. நாளை நடக்கும் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகே, பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி என்னவென்று தெரியவரும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close