Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்ஜுனா விருது மாரியப்பனின் அடுத்த திட்டம் இதுதான்!

மிழக வீரர்கள் ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ், மாரியப்பன் உள்பட 17 வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீயை அடுத்து அர்ஜுனா விருதை அவர் பெறவிருக்கிறார். சேலம் மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனுக்குப் பல தரப்பிலிருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. 
 

 விருதுக்கு மாரியப்பன் பெயர் பரிந்துரை

மகிழ்ச்சியில் திளைத்த மாரியப்பன் கூறுகையில், ''எனக்கு விருது வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்தால் எந்தத் தடையையும் ஏணியாக மாற்றிக்கொள்ள முடியும். திறமையும் முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பெங்களூருவில் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது அடுத்த இலக்கு காமன்வெல்த் போட்டியில் சாதிக்க வேண்டும் என்பதுதான். 

இளைஞர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதையே நான் விரும்புகிறேன் காமன்வெல்த் போட்டி முடிந்ததும் தமிழ்நாட்டில் புதியதாக விளையாட்டு அகாடமி தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். திறமையுள்ள ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு வழங்க விரும்புகிறேன். அந்த விளையாட்டு அகாடமி ஏழை எளிய வீரர் - வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அமையும்'' எனத் தெரிவித்துள்ளார். 

ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றதையடுத்து தமிழக அரசு மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி வழங்கியது. மத்திய அரசும் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் அவருக்குப் பரிசு வழங்கியிருந்தன. அதிலிருந்து விளையாட்டு அகாடமி அமைக்க மாரியப்பன் முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close