Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவுக்கு விற்கப்பட்ட நெல்லை துப்பாக்கி! - நக்சலைட் பின்னணியை அலசும் போலீஸ்

நெல்லை மாவட்டத்தில், துப்பாக்கி தயாரிப்புத் தொழிற்சாலை நடத்திவந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

நெல்லை மாவட்டம், கேரள எல்லையோரப் பகுதியான புளியறையைச் சேர்ந்தவர் ஆழ்வார். இவர்,  இரும்பு பட்டறை வைத்து சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது மனைவியின் ஊரான மாயமான்குறிச்சி கிராமத்துக்குச் சென்று, லேத் அமைத்து தொழில் செய்துவந்தார். மெக்கானிக் தொழிலும் இவருக்குத் தெரியும் என்பதால், புல்லட் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் பழுது நீக்கும் வேலைகளையும் செய்து வந்தார். 

நாட்டுத் துப்பாக்கி

இந்நிலையில், நாட்டுத் துப்பாக்கி தயாரிக்கும் வேலையில் ஆழ்வார் ஈடுபடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது நடவடிக்கைகளை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அவர் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்வது உறுதியானதால், கையும் களவுமாகப் பிடித்தனர். அவரது பட்டறையில் நடந்த சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். 

தொடர்ந்து நடந்த விசாரணையில், நண்பர்கள் உதவியுடன் பிஸ்டல் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை விற்பனை செய்துவந்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதுவரை 100-க்கும் அதிகமான நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கையடக்கமான பிஸ்டல்களைத் தயாரிப்பதில், ஆழ்வார் கில்லாடியாக இருந்ததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆழ்வாரைத் தேடி வந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், கேரளாவிலும் இவரைத் தேடி வந்து துப்பாக்கிகளை வாங்கிச் சென்றுள்ளனர். ' கேரள நக்சலைட்டுகளுக்குத் துப்பாக்கிகள் விற்கப்பட்டதா?' என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

ஆழ்வாருக்கு ஏஜென்ட்டாக செயல்பட்ட பழனிச்சாமி, காளிமுத்து உள்ளிட்ட 9 பேரையும் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில், சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். ‘’கேரளாவிலிருந்து நிறையப் பேர் ஆழ்வாரிடம் பிஸ்டல்களை வாங்கிச்சென்ற விவரம் கிடைத்துள்ளது. அவர்களின் முகவரிகளும் கிடைத்திருக்கின்றன. கேரள மாநில போலீஸாரின் உதவியுடன் அவர்களைப் பிடித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிர விசாரணைக்குப் பின்னர், நிறைய விஷயங்கள் தெரியவரும்’’ என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close