Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொத்து முடக்கம்..! அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு அறிக்கை

வருமான வரித்துறையினர் சொத்துகள் முடக்கியது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை களத்தில் இறங்கியது. முதலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை, புதுக்கோட்டைகளில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையில் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் விஜயபாஸ்கரின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.

இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, வருமான வரித்துறையினர் சொத்துகள் முடக்கம் செய்தது குறித்து விஜயபாஸ்கர் இன்று விளக்கமளித்துள்ளார். அதில், பினாமி பெயரில் எங்கள் குடும்பத்தினர் தொழில் நடத்தவில்லை. காலம் தனது கணக்கைச் சரியாக முடிக்கும். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலினும், அவரது குடும்பமும் ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நாடறியும். மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் முயற்சி ஒருபோதும் நடக்காது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் நற்பணி, வேகத்தையும் முடக்கிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். என்மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டரீதியாக உறுதியாக மெய்ப்பிப்பேன். எதையும் தாங்கும் மன தைரியத்தை ஜெயலலிதா எனக்குள் விதைத்துள்ளார். விமர்சனங்களைத் தாண்டி நான் நிரபராதி என்பதை காலம் நிரூபிக்கும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close