Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோட்டையை நோக்கி நாளை அரசு ஊழியர்கள் பேரணி!

அரசு ஊழியர்கள்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், நாளை சென்னையில் பேரணி நடைபெறவிருக்கிறது. இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ  (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)  ஒருங்கிணைக்கின்றன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச்செய்து, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும்; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், சென்ற ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள முரண்களைக் களைந்து, சரிசெய்யப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், எட்டாவது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

எட்டாவது ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை பேரணி நடத்துகின்றனர். சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கும் பேரணி, தலைமைச்செயலகத்தை சென்றடைகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close