Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜூலியானா மீதான மதிப்பு குறைந்துவிட்டது...!' - உயர் நீதிமன்றத்தில் 'திடீர்' வழக்கு

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிராக, சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிதான் பேச்சு. இந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே, பல்வேறு விமர்சனங்களுடன்தான் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தின.

kamal  Haasan

இந்நிலையில், 'பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி' சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், பிக் பாஸ் நிகழ்ச்சி குடும்பத்தினருடன் பார்க்கும் வகையில் இல்லாமல் ஆபாசமாக  இருக்கிறது. அதனால், அந்த நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று, 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள  நடிகர் ஷக்தி, நாதஸ்வர இசைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டார். அதனால், நடிகர் ஷக்தி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்' என்று  இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

வழக்கு தொடர்ந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த எம்.ஆர்.சரவணனிடம் பேசினோம். " விஜய் டிவியில் ஒளிபரப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பெண்களும் குழந்தைகளும் பார்க்க முடியாதளவுக்கு உள்ளது. தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் அந்த நிகழ்ச்சியில் பறிக்கப்படுகிறது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானா மீதுள்ள மதிப்பு, மரியாதை குறைந்துள்ளது. அவரது நடவடிக்கைகள் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை வெறுப்படையைச் செய்கிறது. இதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை இணைச் செயலாளர், தமிழக அரசு, டிஜி.பி, விஜய் டிவி நிர்வாக இயக்குநர், நடிகர் கமல் ஆகிய ஐந்து பேரை எதிர்மனுதாரராகச் சேர்த்துள்ளோம்" என்றார்.

யார் இந்த சரவணன்?

முன்னாள் அமைச்சர் சின்னய்யாவையும், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் மற்றும் அ.தி.மு.க.வினர் தன்னை ஏமாற்றி பணத்தை பறித்து மோசடி செய்துவிட்டதாக பரபரப்பான தகவலைத் தெரிவித்தவர்தான் இந்த சினி எம்.ஆர்.சரவணன். இவர், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் மீதும் புகார் தெரிவித்தவர். அமைச்சர் சின்னய்யா கொடுத்தப் பணத்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரது குற்றச்சாட்டுக்கள் காரணமாக சின்னய்யாவின் பதவிகள் பறிக்கப்பட்டதாகச் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close