Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுப் பள்ளி ஸ்மார்ட் வகுப்பறைக்காக சீர் கொடுத்த ஊர்மக்கள்!

விருதுநகர் மாவட்டம் ராமகுடும்பன்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி, ஸ்மார்ட் வகுப்பறைக்காக 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர் ஊர் மக்கள்.

govt school smart class goods

ராமகுடும்பன்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம்  37 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 1-ம் வகுப்பில் 7 மாணவர்கள், 2-ம் வகுப்பில் 10 மாணவர்கள், 3-ம் வகுப்பில் 5 மாணவர்கள், 4-ம் வகுப்பில் 10 மாணவர்கள் 5-ம் வகுப்பில் 5 மாணவர்கள் என மொத்தம் 37 மாணவர்களில், 18 மாணவர்களும் 19 மாணவிகளும் படித்து வருகின்றனர். மூன்று வகுப்பறைகள் உள்ள இப் பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியரும், ஓர் ஆசிரியரும் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர்.  

govt school 1

கடந்த வாரம் இக்கிராமத்தில் நடந்த கல்விக்குழு கூட்டத்தில் 'இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள் தேவை' என பள்ளித் தலைமை ஆசிரியர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான உபகரணங்களைப் பட்டியலிட்டு கொடுத்ததும் ஒரே வாரத்தில் பணம் வசூல்செய்து இன்று கிராம மக்கள் சீர்வரிசையாகக் கொண்டுவந்து பள்ளியில் ஒப்படைத்துள்ளனர்.

லேப்டாப், எல்.சி.டி புரொஜக்டர், இரண்டு மைக், இரண்டு ஸ்பீக்கர்கள், ஆம்பிளிபயர் மற்றும் 1,000 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் டேங்க், வாட்டர் பில்டர் என ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை கிராம மக்கள், ஆளுக்கொரு பொருளாகத் தூக்கிக்கொண்டு இப் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து பள்ளிக்கூடம் வரை சீர் வரிசை எடுத்து வருவதுபோல எடுத்துவந்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து தங்கள் பிள்ளைகளையும் வகுப்பறைக்குள் அனுப்பிவிட்டுச் சென்றனர்.

govt school

வெறும் 37 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்பள்ளி மாணவர்களும் கல்வியில் சிறக்க வேண்டுமென ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை கிராம மக்களே வாங்கிக் கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய அளவிலான பள்ளியாக இருந்தாலும் பள்ளியைச் சுற்றி 15 வகையான 60 மரக்கன்றுகளை நட்டு மாணவர்களே தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்கள். ஒரு மாணவருக்கு 2 மரக்கன்றுகள் என தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல அந்தந்த கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிக்கு அந்தந்த கிராம மக்கள் இணைந்து இப்படி ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்தால் அரசுப்பள்ளி மாணவர்களும் ஏற்றம் பெறுவார்கள்.     

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close