Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்? - உயர் நீதிமன்றம் அதிரடி

சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை 55,000 ரூபாயிலிருந்து 1,05,000 உயர்த்தினார். இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

மதுரை கிளை உயர் நீதிமன்றம்

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழக மக்கள் வறுமையில் தவித்து வரும் நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவையா? வறுமை, விவசாயிகள் தற்கொலை, கல்விக் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தமிழகம் தவித்து வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா? சம்பள உயர்வு அளிப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு சரியானதுதானா என்பது பற்றி எம்.எல்.ஏ-க்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்தது.  

தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனிருப்பது பற்றி இந்தப் பொது மனுவில் குறிப்பிடப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close