Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்!

அணு உலை

கூடங்குளம் அணு உலையின் ஜெரனேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. பழுதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இந்த அணு உலைகளின் முதல் அலகானது எரிபொருள் மாற்றும் பணிக்காக நிறுத்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட இந்த அணு உலையானது 60 நாள்களில் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை இயங்கவில்லை. 

இரண்டாவது அணு உலையானது கடந்த ஜூன் 27-ம் தேதி சிறிய பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர், 3 நாளில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் பழுது ஏற்பட்டதால் இன்று காலை 10.35 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கூடங்குளம் அணு சக்தி  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக அணு உலையின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அதைச் சரி செய்து மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

கூடங்குளத்தில் உள்ள முதல் இரு உலைகளிலும் பொருத்தப்பட்டு உள்ள ரஷ்ய உதிரிப் பாகங்கள் தரம் குறைந்தவை என்று, கூடங்குளம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் ஏற்கெனவே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இரு உலைகளிலும் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டு வருவது சுற்றுப்புற கிராம மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. தற்போது இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது கூட தரமற்ற உதிரிப் பாகத்தால் ஏற்பட்டிருப்பதாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close