Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆர்.ஐ. அறையை ஆட்டயப் போட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!'

 நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ-வுக்கு அறை

சென்னை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு நகராட்சி அலுவலகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவருக்கு அந்த அறை ஒதுக்கியதை உடனடியாக நகராட்சி கமிஷனர் ரத்துசெய்ய வேண்டும் என்று பா.ஜ.க. நகரத்தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பல்லாவரம் பெருநகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) அறை, எம்.எல்.ஏ.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், பல்லாவரம் பெருநகரத்தின் பா.ஜ.க. நகரத் தலைவர் கே.எஸ். ஆனந்த், தமிழக தலைமைச் செயலாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். "12,282 சதுர அடியில் செயல்படும் பெருநகராட்சி அலுவலகத்தில் 26 அறைகள் உள்ளன. 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நகராட்சி அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டுவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வருவாய் ஆய்வாளர் பயன்படுத்தி வந்த அறையை கடந்த ஜூலை 28-ம் தேதி, பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதிக்கு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கிக்கொடுத்துள்ளது. இதனால் வருவாய் அலுவலர் இடமில்லாமல் சிரமப்படுகிறார். மேலும், எம்.எல்.ஏ.வைச் சந்திக்க வரும் மக்கள் கூட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தனி அலுவலகம் இல்லை. இதனால், மக்கள், தங்களின் குறைகளைச் சொல்ல முடியாமல் சிரமப்பட்டுவந்தனர். பல்லாவரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்கு தனியாக அலுவலகம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

இதுகுறித்து பல்லாவரம் பெருநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் கேட்டதற்கு, "தற்காலிகமாக நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.வுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் ஆர்.ஐ. இருந்தார். அவருக்கும் வேறு அறை வழங்கவுள்ளோம்" என்றவரிடம் எம்.எல்.ஏ.வுக்கு அறை ஒதுக்க எதாவது உத்தரவு வந்ததா என்று கேட்டதற்கு, 'உயரதிகாரிகள் எனக்கு வாய்மொழியாக கொடுத்த உத்தரவின்பேரில் அறை ஒதுக்கினேன்' என்றார். 

பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதியிடம் பேசினோம். "மக்களைச் சந்திக்க எனக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லாதது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. எனக்கு முன்பு இருந்த எம்.எல்.ஏ.வுக்குத் தனியாக அலுவலகம் இல்லை. அவர், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறையில்தான் இருந்தார். நான் நகராட்சித் வழக்கறிஞர் ஜெனிதாதலைவராக இருந்தபோது, எம்.எல்.ஏ.வுக்கு அறை ஒதுக்கி கொடுத்திருக்கிறேன். வருவாய்த் துறை ஆய்வாளர் அறையை எனக்கு ஒதுக்கிய தகவல் எதுவும் தெரியாது" என்றார். 

 இதுகுறித்து வழக்கறிஞர் ஜெனிதா கூறுகையில், "நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.வுக்கு அறை ஒதுக்க கமிஷனருக்கு அதிகாரமில்லை. அவர் எந்த அடிப்படையில் அறை ஒதுக்கினார் என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ., அலுவலகம் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும்போது நகராட்சி கமிஷனர், எம்.எல்.ஏ-வுக்கு அறை ஒதுக்கியது சட்டத்தை மீறியச் செயல். நகராட்சி அலுவலகத்தைத் தவிர்த்து வேறு பல அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. அங்கு எல்லாம் அறை ஒதுக்காமல் நகராட்சி அலுவலகத்தில் அறை ஒதுக்க அவசியம் என்ன. எம்.எல்.ஏ-வுக்கு அறை ஒதுக்கியதை உடனடியாக நகராட்சி கமிஷனர் ரத்துசெய்ய வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கிரிமினல் வழக்கு தாம்பரம் நீதிமன்றத்தில் தொடரப்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close