Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் திலீப் ஜாமீனில் வெளி வருகிறாரா?

பிப்ரவரி மாதம்  17-ம் தேதி பிரபல மலையாள நடிகை ஷூட்டிங் முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கொச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப்  பார்க்க வைத்தது. நடிகை கடத்தல் தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேரை கேரள போலீஸார் கைதுசெய்தனர். 

நடிகை கடத்தல் வழக்கில் கடந்த மாதம் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 14 நாள்கள் அங்கமாலி சப் ஜெயிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடந்தது. நடிகர் திலீப் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்ததை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் நேரடியாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. வரும் 8-ம் தேதியுடன்  திலீப்பின் காவல்  முடிவடைகிறது. அதனால் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுக அவர் முடிவு செய்தார்.

கடந்த காலங்களில் நடந்த பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை கொடுத்ததினால் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு  இல்லை என திலீப்பின் வழக்கறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுக திலீப் தீர்மானித்துள்ளார். தற்போது அவருக்காக ராம்குமார் என்கிற மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். அவரை மாற்றிவிட்டு புதிய வழக்கறிஞரை நியமிக்க நடிகர் திலீப் ஆலோசனைசெய்து வருகிறாராம். திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி தலைமறைவாக இருப்பது மற்றும் ஆபாச படம் எடுத்த செல்பொன் சிக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டிதான் கேரள உயர் நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை  தள்ளுபடி செய்தது. தற்போது அப்புண்ணி போலீஸில் சரணடைந்து விட்டார். அதேபோல் ஆபாசப்படம் எடுத்த செல்போனை எரித்துவிட்டதாக பல்சர் சுனிலின் வழக்கறிஞர்  பிரதீஷ் சொன்னதாலும் நடிகர் திலீப்புக்கு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close