Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளால் புதிய சர்வதேச வீரர்கள் உருவாகிறார்கள்! - லான்ஸ் குளூஸ்னர் கருத்து

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் காரணமாக புதிய சர்வதேச வீரகள் உருவாகும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக முன்னாள் வீரர் லான்ஸ் குளூஸ்னர் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் குளூஸ்னர்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான லான்ஸ் குளூஸ்னர் தற்போது கோவை லைகா கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அவரது பயிற்சியில் கோவை லைகா அணி சிறப்பான வகையில் விளையாடி வருகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘’கோவை வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பான வகையில் விளையாட வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தி வருகிறேன். அப்படி விளையாடினாலே அவர்களால் அனைத்து அணிகளையும் வீழ்த்த முடியும். 

கோவை அணியின் வீரர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது திறமை இப்போது மெருகேறி வருகிறது. அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியானது இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்றுள்ள சில வீரர்களுக்கு ஆட்டக் களமானது சவாலானதாகவே இருக்கும். ஆனால், பழைய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

எங்களுடைய அணியில் இருந்து சில வீரர்கள் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிக்கான அணிக்குத் தேர்வாவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுவாக டி.என்.பி.எல் போட்டிக்கான அணியில் இருந்து 6 வீரர்கள் ஐ.பி.எல் போட்டிக்குத் தேர்வானாலே இந்தப் போட்டிக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும். அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐ.பி.எல் போட்டிக்குத் திரும்பும்போது நிறைய உள்ளூர் வீரர்களை அந்த அணியில் எதிர்பார்க்கலாம் என்பது எனது நம்பிக்கை.  

குளூஸ்னர்

பொதுவாக, டி20 போட்டி என்பது நேரத்தைப் பொறுத்து ஆடக்கூடியது. அந்த சமயத்தில் எவ்வளவு ரன்கள் தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விளையாடும் பக்குவத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்யும்போது, எவ்வளவு ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதை பேட்ஸ்மேன்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டி.என்.பி.எல் போட்டியால் நிறைய சர்வதேச வீரர்கள் உருவாவார்கள் என்பதே பெருமைக்குரிய விஷயம் தானே’’ என்கிறார், கோவை அணியின் பயிற்சியாளரான லான்ஸ் குளூஸ்னர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close