Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோ கெமிக்கல் மண்டலம்... உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சொல்வது என்ன?

பெட்ரோ கெமிக்கல்

மத்திய அரசின் உத்தரவின்படி, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை, கடந்த மாதம் 19-ம் தேதி, நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து அரசாணை நிறைவேற்றியது. அதில் சிதம்பரம், கடலூர், புவனகிரி, சீர்காழி உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கி 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு, கச்சா எண்ணெய் எடுத்தல், எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய பணிகளுக்காக என குறிப்பிடப்பட்டது. இதே சூழ்நிலையில் நெடுவாசல், கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டம் நடைபெறுவதால், 45 கிராமங்களில் எண்ணெய் ஆய்வுகள் நடக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதிகாரிகள் மறுப்பதாலும், தமிழக அரசு ஆணை நிறைவேற்றி இருப்பதாலும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். 

இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய அமைப்புக்களும், ஓ.என்.ஜி.சிக்கு எதிரான இயக்கங்களும் இந்த அறிவிப்பால் கொந்தளிப்பில் உள்ளன. 45 கிராமமக்களுக்கு எந்த விதமான தகவலும் சொல்லாமல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்களிடம் கருத்துக் கணிப்பும், மக்களின் கருத்துக்களையும் அரசு அதிகாரிகள் கேட்க வேண்டும். இதில் அதுபோல எந்த விதமான நடவடிக்கைகளும் நடக்கவில்லை. இந்தத் திட்டம் சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க உள்ளது. சாலைகள், ரயில்பாதைகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்காக மத்திய அரசின் தரப்பில் 146 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. இதனால் அதிகமான நிலங்களும், விவசாயமும் மிகப் பெரிய பாதிப்பிற்குள்ளாகும். எதிர்கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,' பூவுலகின் நண்பர்கள்' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடங்கப்பட்டு, அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் பேசினோம். "எண்ணெய் எடுப்பதற்கான திட்டத்தின் அடுத்தகட்ட நீட்சிதான், பெட்ரோ-கெமிக்கல் காம்ப்ளக்ஸ் திட்டம். இதற்காக 45 கிராமங்களை அறிவிக்கிறோம் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்னறிவிப்பு எந்த கிராமத்துக்கும் முறையாக அரசின் சார்பில் தெரிவிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டம் ஏற்கெனவே ரசாயனத்தால் நிரம்பி 'சின்ன போபால்' போல் காட்சியளிக்கிறது. அங்கேயே மீண்டும், இந்தத் திட்டத்தைத் தொடங்குவது அம்மாவட்ட மக்களுக்குப் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தரும். அரசாணை வெளியிட்டால், அதற்குரிய கிராமத்தின் பெயர்கள், எந்த இடங்கள் என்பதையும் அரசு குறிப்பிட்டுக் காட்டியிருக்க வேண்டும். அப்படி எந்த நிலங்களை எடுக்கப்போகிறோம், எவ்வளவு எடுக்கப் போகிறோம் என்பது பற்றி அரசாணையில் எங்குமே காட்டப்படவில்லை. கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் கிராம மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இந்தத் திட்டத்தால், ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டம் மேலும் சீர்கெட்டுப்போகும். பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் அமைய இருக்கின்ற இடங்களில், ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்படும். ஏற்கெனவே, நெய்வேலியில் ஆரம்பித்த தொழிற்சாலை நிலங்களின் உரிமையாளர்களுக்கே அறிவிக்கப்பட்ட தொகை போகவில்லை. அவர்களும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு 'வேலை தருகிறோம்' என்று கொடுத்த எந்த வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது அறிவித்திருக்கும் அரசாணையின்படி, மக்களுக்கு எப்படி முழுமையாகக் கிடைக்கும் என நம்ப முடியும். எனவேதான், இந்தத் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அதில் ”45 கிராம மக்களுக்கு உரிய அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இத்திட்டத்தைப் பற்றி முழுமையயான அறிவிப்பை மத்திய அரசோ, மாநில அரசோ வெளியிடவில்லை. இத்திட்டம் குறித்த அறிக்கையை மத்திய அரசும், மாநில அரசும் இன்னும் 4 வார காலத்திற்குள் தன்னுடைய விளக்க அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது" என்றார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close