Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மடிப்பாக்கம் தேவி பொன்னியம்மன் கோயில் ஆடி உற்சவம் ஆகஸ்ட் 6-ம்தேதி நடக்கிறது!

சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிறது, தேவி பொன்னியம்மன் கோயில். 60 ஆண்டுகளுக்கு முன்பாக  மடிப்பாக்கம் பகுதி, வயல்களும் பயிர்தொழிலுமாக இருந்த பூமி. அப்போது  இந்தக் கோயிலை அப்பகுதி மக்கள் வனக்காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இப்போது வேளச்சேரி, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை என இந்தப் பகுதி விரிவடைந்துகொண்டே போகவே லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை உயர்த்தி, இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்றாள் பொன்னியம்மன்.

பொன்னியம்மன் கோயில்

ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் பெண்கள் பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்துவருவது வழக்கம். குறிப்பாக, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.வீரமணிராஜூ மடிப்பாக்கம் தேவி பொன்னியம்மன் கோயிலில் நாளை மறுநாள் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 11 மணி அளவில், விசேஷ அபிஷேகம் மற்றும்  பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 'கூழ் வார்த்தல்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு வீரமணிராஜுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close