Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' ஹய்யா நாங்க ஸ்கூல் போறோமே... !' ஏழைப் பிள்ளைகளைத் தத்தெடுத்த போலீஸ்


'பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா, டீச்சர்?'

குடும்பச்சூழ்நிலையால் படிப்பைப் பாதியில் நிறுத்திய ஏழைப்பிள்ளைகள் போலீஸ் ரோந்து வாகனத்தில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. 'ஹய்யா, நாங்க ஸ்கூலுக்குப் போறோமே' என்று குதூகலிக்கும் இவர்களைப் போன்ற சிறுவர்களின் புன்னகையில்தான் ஒளிரும் இந்தியாவைக் காணமுடியும். நடைபாதையில் வசிக்கும் அன்றாடக் கூலிகளின் பிள்ளைகளும் பள்ளிக்குப் போய்வரக் காரணமாய் இருக்கிறது சென்னை அம்பத்தூர் போலீஸ்.  சில ஆண்டுகளுக்கு முன்னர், 'காவலர் உங்கள் சேவகர்' என்ற குறும்படத்தை சென்னை போலீஸார் வெளியிட்டதுதான் கண்முன் காட்சியாக வந்து போகிறது. எதிர்கால இந்தியாவைத் தீர்மானிக்கக் கூடிய அந்தப் பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்குப் போகக் காரணமாக இருப்பவர், விஜயராகவன். சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் இன்ஸ்பெக்டர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஜயராகவனிடம் கேட்ட போது, "இதுவும் ஒரு காவல்பணிதான்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இன்ஸ்பெக்டர் விஜயராகவன், மாணவர்களுடன்
 

அம்பத்தூர் போலீஸாரிடமும், அந்தப்பகுதிவாசிகளிடமும் கேட்டோம். "அம்பத்தூர் பி.எஸ்.என்.எல். அருகே  ஜீப்பில் ரவுண்ட்ஸ் போகும்போதுதான் அந்தப் பிள்ளைகளைப் பாலத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் பார்த்திருக்கிறார். விசாரித்தபோதுதான், அவர்கள் அதேப் பகுதியில் இரும்பு, பிளாஸ்டிக் உதிரிகளைச் சேகரித்து கடைகளில் கொடுத்து அன்றாடம் பசியாறுகிற குடும்பத்துப் பிள்ளைகள் என்று தெரியவந்தது. மேலும், வறுமையின் காரணமாகப் பிள்ளைகளின் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டதாக அவர்களின் பெற்றோர்கள்  தெரிவித்தனர். அதன்பிறகுதான் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் இதில் வேகம் காட்டினார். எங்களிடம் (போலீஸார்) பேசினார்.  ஒரு நல்ல விஷயத்துக்கு உதவாமல் இருக்கமுடியுமா? இன்ஸ்பெக்டரோடு சேர்ந்து ஆளாளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். மொத்தம் பத்துப் பிள்ளைகள். சீருடை, புத்தகம், பை, ஷூ, சோப்பு, பேஸ்ட் என்று அனைத்தும் அந்தப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மனம் நிறைவாக இருப்பதை உணர்கிறோம். 

ஹய்யா... ஜாலி... நாங்க ஸ்கூலுக்குப் போறோமே

போலீஸ் ஜீப் எப்படியும் தினசரி ரவுண்ட்ஸ் போய்த்தான் ஆகவேண்டும். இந்தப் பிள்ளைகள் படிக்கும் பட்டரவாக்கம் அரசுப்பள்ளிக்கூடம் இருக்கும் பக்கமாக ஜீப்பில் ரவுண்ட்ஸ் போய்விடுகிறோம். ரவுண்ட்ஸும் போனது போல் ஆச்சு, பிள்ளைகள் பள்ளிக்குப் போனது போலும் ஆச்சு...  கொஞ்சநாள் நாம் இதை செய்து விட்டால் பின்னர் அவர்களுக்கே கல்வி ருசிக்க ஆரம்பித்து விடும். தானாகவே பள்ளிக்குப் போக ஆரம்பித்து விடுவார்கள்" என்றனர்... 'பிள்ளைகள் எப்படிப் படிக்கிறார்கள், அவர்களுக்கு இன்னும் என்னென்ன தேவைகள் இருக்கிறது' என்று அடிக்கடி பள்ளி ஆசிரியர்களை நேரில்போய்ப் பார்த்து விசாரிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் விஜயராகவன்.
விஜயராகவனைப் போன்றே சென்னை எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்  சரவணபிரபுவும் ஏழைமாணவர்களின் கனவு நாயகனாகத் திகழ்கிறவர்தான்... கல்விக்காக நண்பர்களுடன் இணைந்து கல்விக் 'கை' கொடுத்துக்கொண்டிருக்கிறார்... அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்... பாரதிகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள் !

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close