Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் மீது தாக்குதல்: மோடிக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்!

குஜராத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல்காந்தி பார்வையிடச் சென்றபோது அவரது கார் தாக்கப்பட்டதால் மோடியைக் கைதுசெய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் அய்யலுசாமி, கோவில்பட்டி டி.எஸ்.பி அலுவலகம் அருகிலுள்ள டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

tower

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று குஜராத் மாநிலத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றபோது, பனஸ்கந்தா என்னுமிடத்தில் மர்மநபர்கள் ராகுலின் பாதுகாப்பு  கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், கார் கண்ணாடிகள் உடைந்து நொருங்கி காருக்குள் கல் சென்றுவிட்டது. இதில் அதிஷ்டவசமாகக் காயங்கள் ஏதுமின்றி தப்பினார் ராகுல்.  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்பதால்தான் இப்படிச் செய்துள்ளனர் எனக் காங்கிரஸார் பா.ஜ.க மீது குற்றம்சாட்டி பேசப்பட்டு வந்த நிலையில்,

இன்று காலை கோவில்பட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அய்யலுசாமி என்பவர்,  ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடியைக் கைது செய்ய வலியுறுத்தியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்து கொடுக்காத குஜராத் அரசைக் கலைக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி  டி.எஸ்.பி அலுவலகம் அருகிலுள்ள காவல்துறைக்குச் சொந்தமான 200 அடி உயரமுள்ள டவர் மீது ஏறி மோடியைக் கைது செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இரண்டரை மணி நேர போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அய்யலுசாமியைக் கீழே இறங்கச் சொல்லி எச்சரிக்கை செய்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   

ayyalusamy

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close