Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1,500 பேருக்கு டெங்கு காய்ச்சல்! குமரி மாவட்டத்தில் வீடுவீடாக சுகாதாரத்துறையினர் ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த மாதம் திடீரெனப் பெய்த மழையும், சீதோஷ்ண நிலையை மாற்றியது. இதனால், மழை நீர் பல இடங்களில் தேங்கி சுகாதாரக்  கேடும் ஏற்பட்டது. சாக்கடைகளில் அதிக நீர் தேங்கியதால், டெங்கு கொசுக்கள்  பரவின. களியக்காவிளை தொடங்கி கன்னியாகுமரி வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகமானவர்கள் காய்ச்சலுக்காக  சிகிச்சைபெற்றுச் சென்றனர். அவர்களில் பலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், டெங்கு காய்ச்சல்  இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு, உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் முதல் இன்று வரை 1,500 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையிலும் தக்கலை மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஆசாரிப்பள்ளத்தில் ஆண், பெண், குழந்தைகள் என  மூன்று சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் இருந்து விரைவில்  குணமடைய சிகிச்சை அளிக்கப்படுகிறது. போதுமான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கியவர்களின் ரத்தத்தைப் பரிசோதனை செய்ய 13 லட்ச ரூபாய் செலவில்  மெஷின் அமைக்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில், சுகாதாரத்துறையினர்  டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 1050 பேர் நியமிக்கப்பட்டு, வீடு வீீடாகச் சென்று ஆய்வுப் பணிகளைச் செய்துவருகின்றனர். வீடுகளில் டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை எடுக்க ஆலோசனையும் கூறிவருகின்றனர். கொசு மருந்து அடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் ஒழிப்பில்,  மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவானும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் ஆகியோரும் நேரில் ஆய்வுசெய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close