Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்; தினகரனை கலாய்த்த ஜெயக்குமார்

டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.கள் பழனி, போஸ், சத்திய பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்க மறுத்துள்ளனர். அதே நேரத்தில், தினகரனின் அறிவிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இணை, டி.டி.வி.தினகரன் கொடுத்த 60 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவார் என்ற பரபரப்பு முதல்வர் பழனிசாமி அணியினருக்கு இருந்த நிலையில், நேற்றிரவு திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

தனக்கு ஆதரவாகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் புதிய பதவிகளைக் கொடுத்தார் தினகரன். முக்கியமாக, எம்.எல்.ஏ-க்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோரை அமைப்புச் செயலாளராகவும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ., பழனிக்கு ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பதவியையும் வழங்கினார். இந்தப் பதவி தனக்கு வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் பழனி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய பழனி, "நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை; ஜெயலலிதாவால் கிடைத்த எம்.எல்.ஏ. பதவியே போதுமானது. தினகரன் அறிவித்த பதவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தினகரன் அளித்த கட்சிப் பதவி வேண்டாம்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனிடையே தினகரன் அறிவித்த பதவி எனக்கு தேவையில்லை என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ், பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனார். விவசாய பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பை போஸூக்கும் மகளிரணி இணைச்செயலாளர் பொறுப்பை சத்யா பன்னீர்செல்வத்துக்கும் தினகரன் நேற்று வழங்கியிருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தினகரனை இன்று சந்தித்தனர். அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பழனியப்பன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தவே புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் தினகரன் என்றார். 20 எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று தினகரன் பொறுப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தினகரன் நியமித்துள்ள பதவிகள்குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுச்செயலாளர் விவகாரம் ஆணையத்தில் உள்ளபோது, அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியே என்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது என்றும் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close