Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி திடீர் சந்திப்பு!

டி.டி.வி.தினகரனை இன்று காலை அவரது இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி திடீரென சந்தித்துப் பேசினார்.

.விஜயதாரணி

முதல்வர் பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அ.தி.மு.க. பிரிந்திருக்கும் நிலையில், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இன்று சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி.தினகரனை திடீரென சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, ‘டி.டிவி.தினகரன் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது அல்ல. தினகரனின் மாமியார் சமீபத்தில் காலமானார். அவரது மாமியாரின் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்கவே இன்று அவரது இல்லத்தில்  குடும்பத்தாரை வந்து சந்தித்தேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பா.ஜ.க. செயலை கண்டிக்காவிடில் அதிமுக நிலைக்காது. தமிழக ஆளும்கட்சியின் சுதந்திரத்தை பா.ஜ.க. பறித்துள்ளது. கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமையாக தினகரன் விளங்குவார். இதனால் தினகரனை முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரிக்க வேண்டும்’ என்றார்.

டி.டி.வி.தினகரனின் மாமியாரும் சசிகலாவின் அண்ணன் மனைவியுமான சந்தான லட்சுமி கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close