Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஸ்வின் ஐந்து விக்கெட்; இலங்கைக்கு ஃபாலோ ஆன் #MatchUpdates

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் பிடித்தபோது, இரண்டு பேர் சதமடித்தார்கள். நான்கு பேர் அரை சதம் அடித்தார்கள். இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை. நேற்றைய தினம் 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தது. இந்நிலையில், மூன்றாவது நாள் தொடங்கியது. இன்றைக்கு மதிய உணவு இடைவேளைக்குச் செல்வதற்கு முன்பாகவே, முதல் இன்னிங்ஸை இழந்துவிட்டது  இலங்கை. 

இந்தியா  Vs இலங்கை

49.4 ஓவர்களில், 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. நிரோஷன் டிக்வெல்லா மட்டும் அதிரடியாக ஆடி 48 பந்துகளில் ஏழு பௌண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 51 ரன்களைக் குவித்தார். தில்ருவான் பெரேராவும் 34 பந்துகளில் 3 பௌண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 25 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள்  வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய சார்பில் அதிக முறை  ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் அஸ்வின். கும்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 35 முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அஸ்வின்  51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 26 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close