Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சி கடத்தல் தாக்குதல் - பீகாரிலும் துவக்கியது பா.ஜ.க!

மத்திய அரசு மாட்டிறைச்சித் தடைச் சட்டம் கொண்டுவந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தது ஒரு சில மாநிலங்கள்தான். கேரளா, பீகார்,மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள்தான் அவை.  மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், தமிழக அரசுகூட அடக்கித்தான் வாசித்தது. இந்நிலையில்தான் தற்போது நிதிஷ்குமார்-லாலு பிரசாத் கூட்டணி முறிந்து, பா.ஜ.க - நிதிஷ் கூட்டணி ஆட்சி தொடங்கியுள்ளது. பா.ஜ.க ஆதரவுபெற்ற ஆட்சி தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மாட்டிறைச்சி கடத்துகிறார்கள் என்கிற பெயரில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடைபெறும் தாக்குதல்கள் பீகாரிலும் தொடங்கியுள்ளன. 

பாஜக

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹ்பூர் பகுதியில், இறைச்சி ஏற்றிச்செல்வதாகக் கூறி ஒரு லாரியை வழிமறித்த பா.ஜ.க-வினரும்,பஜ்ரங்தள் உறுப்பினர்களும், அந்த வண்டியில் இருந்த ஓட்டுநர் மற்றும் கூட இருந்த இரண்டு பேரையும் அடித்துள்ளனர். பின்னர், காவல்துறை தலையிட்டு அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.  

"இப்போது நடைபெறுவது எங்களின் அரசு.. இதற்கு முன் இருந்ததைப்போல அமைதியாக இருக்க மாட்டோம். ராணிசாகர் மற்றும் பாகாகி ஆகிய பகுதிகளுக்கு மாட்டிறைச்சி அதிகம் கடத்தப்படுவதாகவும், சட்டவிரோத கொலைக்கூடங்கள் நடத்தப்படுகிறது என்றும் புகார் கொடுத்துள்ளோம்" என்று சாஹ்பூர் நகர பா.ஜ.க தலைவர் சந்தன் பாண்டே தெரிவித்துள்ளார். 

ராணிசாகர் மற்றும் பாகாகி ஆகிய இரு பகுதிகளும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close