Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் காந்தி கார்மீது கல்வீச்சு: திருநாவுக்கரசர் தலைமையில் சாலை மறியல்!

ராகுல் காந்தி கார்மீது நடந்த கல்வீச்சு சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில், தமிழகக் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் கட்சியினர் சாலை மறியல்செய்தனர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பனஸ்கந்தா மாவட்டத்தின் தானேரா நகரில், நேற்று மக்களை சந்திக்கச் சென்ற ராகுலுக்கு, பா.ஜ.க-வினர் கறுப்புக்கொடி காட்டியும் பிரதமர் மோடிக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்த ராகுலின் கார்மீது சிமென்ட் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ராகுல் காந்தி பெரிய காயங்கள் இன்றி தப்பியதாகவும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களே திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ராகுலின் கார் தாக்கப்பட்டது போன்ற புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ராகுல் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பா.ஜ.க-வைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கட்சியினர் சாலை மரியலில் ஈடுபட்டனர். இவர்களைத் தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close