Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யோகாவில் சாதனை படைத்த 10 வயது மாணவி

யோகா பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் பள்ளியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் ஹர்ஷா நிவேதா என்ற மாணவி  4.59 நிமிடத்தில் 100 வகையான ஆசனங்களைச் செய்து, இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவே இந்திய அளவில் முதல் சாதனையாகும் என்கிறார்கள். 

yoga


இதில் கண்களைத் துணியால் மூடிக்கொண்டும், திறந்து கொண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களைச் செய்தார். கண்ணாடி டம்ளர்கள் மீது அமர்ந்து ஆசனங்கள்செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மாணவி நிவேதாவிடம் கேட்டபோது, "யோகாவை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும், அதை வலியுறுத்தவே இந்த ஆசனங்களை விரைவாகச் செய்தேன். பார்வையற்றவர்களும் யோகாவை சுலபமாகச் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையிலும், உடல் குறைபாடு யோகாவுக்கு ஒரு தடையில்லை என்பதை விளக்கவும் கண்களை மூடிக்கொண்டு செய்தேன். இந்த ரிகார்ட் செய்வதற்கு முக்கிய காரணம், மக்கள் நோயின்றி உற்சாகமாக வாழ யோகா எல்லோருக்கும் அவசியம் என்பதை  மக்களிடம் தெரிவிக்கவே இந்த சாதனையைச் செய்தேன்" என்று உற்சாகமாக பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close