Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிக் பாஸ் போட்டியில் தொடரும் ஓவியா?

ஓவியா, அதிக மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார் என 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சொல்லி வந்தார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களும் ஓவியா நடவடிக்கையின் மூலம் இதை உணர்ந்தார்கள். நேற்றை நிகழ்ச்சியிலும், ஓவியா நீச்சல் குளத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூழ்கியதைப் பார்த்ததுமே... சினேகன், ஆரவ் உள்ளிட்டவர்கள் ஓவியாவை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டனர். அவர், தற்கொலை எண்ணத்துடன் விழுந்தாரா அல்லது கவனஈர்ப்புக்காகச் செய்தாரா என்பது தெரியாமல் அங்கு இருப்பவர்கள் குழம்பிப் போனார்கள். 'உடனே இந்த வீட்டைவிட்டுப் போகணும்' எனத் தொடர்ந்து சொல்லிவந்தார்.

ஓவியா

காயத்ரியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த 'பிக் பாஸ்', 'ஓவியாவின் மேனேஜர் வந்துகொண்டிருக்கிறார். அவரை 45 நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லுங்கள்' என்றார். ஆனால், அதுவரைகூட ஓவியாவால் அங்கு இருக்க முடியவில்லை. அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்கிற தவிப்பிலேயே இருந்தார். '45 நாள் இருந்துட்டே... ஒரு 45 நிமிஷம் இருக்க முடியாதா’ என்று காயத்ரி, ஓவியாவிடம் பேசி அமைதிகாக்க வைத்தார். அத்துடன் நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.

இதற்கிடையில் ஓவியா, பிக் பாஸ் வீட்டிலிருந்து சிவப்பு காரில் செல்வதுபோன்ற ஒரு புகைப்படம் வெளியானது. இதையடுத்து, 'ஓவியா, பரணியைப்போல 'பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்' என்று பலரும் தகவல்களைப் பரப்பினர். 

இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் விசாரித்தோம், ''உண்மைதான். ஓவியாவுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டது. அதனால், அவரை வெளியே அழைத்துச் சென்றோம். அவரை  மருத்துவக் குழு முழுவதும் பரிசோதனை செய்தார்கள். அவர் முழு ஆரோக்கியத்துடனும் முழு மன நலத்துடனும் இருக்கிறார் என்று அந்தக் குழு சொன்னது. இதையடுத்து, 'மீண்டும் நான், 'பிக் பாஸ்' வீட்டுக்குள் போக ஆசைப்படுகிறேன்.' என ஓவியா சொன்னார். அதனால், அவரை வீட்டுக்குள் அனுப்பியுள்ளோம். 

ஓவியா, வையாபுரி, ஜூலி மூவரும் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். வாக்குகள் அடிப்படையில் யார் வெளியேறுவார் என்பதை கமல் சார் இன்று அறிவிப்பார். அது நாளை ஒளிபரப்பாகும். ஒருவேளை, ஓவியா அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டாலும், உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவர் வெளியேற விரும்பினால், அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது'' என்றார்கள்.

நாம் அறிந்த வகையில், வாக்குகள் எண்ணிக்கையின்படி ஜூலி வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஓவியா தானாக வெளியேற விரும்பினால், ஓவியாவை வெளியே அனுப்புவதா அல்லது தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதா என்பதை கமல் முடிவு செய்வார்.

 

அப்டேட்: 

இந்த மூன்று நாட்களாக மருத்துவர்களிடம் ஓவியா பேசும்போதெல்லாம் அங்கிருந்து வெளியேறவே விரும்புவதாக அறிவித்தாராம். நேற்றைய எபிசோடிலும் மருத்துவர்களிடம் அதையே சொல்லியிருந்தார். எனவே தான் வேறுவழியில்லாமல் ஓவியா அங்கிருந்து வெளியேறினார். மருத்துவர்களின் ஆலோசனைக்குப்பின் இன்று ஓவியா பிக் பாஸ் வீட்டில்தான் இருந்தார்.

Oviya

பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியதாலேயே விஜய் டிவி நிறுவனம், ஓவியாவும் கமலும் இருக்கும் அந்த புகைப்படத்தை முதல் முறையாக தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் கமலுடன் பேசிய பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர விரும்புவதாக ஓவியா தெரிவித்ததால், ’பிக்பாஸ்’ போட்டியில் ஓவியா தொடர்வார் என்று தகவல்கள் வருகின்றன.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close