Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆக.7-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தங்கத்தேர் நன்கொடை முகாம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரள மாநில பெண் பக்தர்கள் இருமுடி கட்டி மண்டைக்காடுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். எனவே, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக மாசிக் கொடை விழா நடை பெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படும்.

மாசி கொடை விழாவின்போது பகவதி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் மாசி கொடை விழாவுக்கு முன் அம்மனுக்கு 3 கோடி மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தங்கத்தேர் உருவாக்கப் பணிகளுக்காக தனிப்பட்ட நபர்களை சந்தித்து நிதி திரட்ட கோயில் நிர்வாகம் முன் வரவில்லை. அனைத்துப் பக்தர்களின் பங்களிப்போடு இதனைச் செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கோயில் நிர்வாகம் வரும் 7-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கத்தேர் நன்கொடை வசூல் முகாம்கள் நடத்த முடிவுசெய்துள்ளது. அன்று காலை முதல் மாலை வரை ஒரு நாள் மட்டும் நன்கொடை வசூல் முகாம் நடக்கிறது. முகாமில் வசூலாகும் பணத்தைக்கொண்டு மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு தங்கத்தேர் செய்யப்படும் என்று மண்டைக்காடு பகவதி அம்மன்  திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களும், கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வரும் 7-ம் தேதி தங்கத்தேர் நன்கொடை வசூல் முகாம்களில் தங்கள் காணிக்கைகளைக் கொடுக்க ஆர்வமாக உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close