Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிர்ப்பை மீறி மீண்டும் திறக்கப்பட்டது டாஸ்மாக் கடை! கொந்தளிப்பில் பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மக்களின் தொடர் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை இப்போது மீண்டும் திறந்திருக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் டாஸ்மாக் மதுபானக் கடையை அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி, எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் எண்ணத்தை கைவிட்டார்கள் டாஸ்மாக் அதிகாரிகள். பிறகு, அதே ஆத்துப்பாளையம் பகுதியின் வேறோர் இடத்தில் கடந்த மே மாதம் புதிய மதுக்கடையைத் திறக்க முயன்றார்கள் அதிகாரிகள். ஆனால், அதையும் போராட்டம் மூலம் தடுத்தி நிறுத்தினர் மக்கள்.

பின்னர் அதையும் மீறி, ஜூன் மாதத்தில், அப்பகுதியில் மதுக்கடையைத் திறந்தேவிட்டார்கள் டாஸ்மாக் அதிகாரிகள். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கடந்த ஜூன் 23-ம் தேதி டாஸ்மாக் கடைக்கு எதிராக மிகப்பெரிய அளவிலான மறியல் போராட்டத்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விரைவில் இடமாற்றம் செய்யப்படும். மேலும் இந்தப் பகுதியில் புதிதாக எங்கும் டாஸ்மாக் கடையை அமைக்கவும் மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொறுமையாக இருந்த மக்களைச் சீண்டும் விதமாகப் புதிய டாஸ்மாக் கடையை இம்மாத துவக்கத்தில் அங்கே திறந்துவிட்டிருக்கிறது அரசு.

ஆத்துப்பாளையம் பகுதி மக்களிடையே மிகப்பெரும் அதிருப்தியை உண்டாக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு எதிராக இப்போது மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் மக்கள். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த ஆத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள், ''எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மீண்டும் கடையைத் திறந்திருப்பது எங்களை மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. எனவே, உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு அளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close