Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்போதுதான் ஞானோதயம் வந்ததா?- பன்னீர்செல்வத்தை கலாய்க்கும் துரைமுருகன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி எழுப்பினார். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின், நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக இருந்தது.

துரைமுருகன்


ஆனால், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி அவர் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க அணிகள் இணைவதற்கு டி.டி.வி. தினகரன் 60 நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தார். அந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் டி.டி.வி தினகரன். பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும், பன்னீர்செல்வம் அணி பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் அணி தரப்பில், வருகிற 10-ம் தேதி வட சென்னையில் போராட்டம் நடக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு, நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அ.தி.மு.க அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "அ.தி.மு.க அரசில் நேற்றுவரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது. உயிர்வாழ குடிநீர் அவசியமானது. அதைத் தருவது அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்ததா?" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close