Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை... மழை... மழை குஷியில் சென்னைவாசிகள்!

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழை பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கோடை காலம் முடிந்து, தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப் பொழிவு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ச்சியாக மழை இருப்பதில்லை.

சென்னை மழை


குறிப்பாக, தென்மேற்கு பருவமழை சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதையடுத்து, சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் அளவு குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தேனாம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close