Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தினகரனைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள்': மிரண்டு ஓடிய அமைச்சர்கள்


டி.டி.வி.தினகரன் பற்றிய கேள்விக்கு, 'அவரைப் பற்றி எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள்' என்று பதில் சொல்லமுடியாமல் அலறியடித்து ஓடினர் அமைச்சர்கள்.

                                                   

அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அதிரடியாகப் புதிய நிர்வாகிகளை அறிவித்திருந்த நிலையில், வரும் 23-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரியலூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கான முன்னேற்பாடு பணியாக, பந்தல் கால்கோள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு பந்தக்காலை நட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

                          

இதனையடுத்து செய்தியாளர்கள் அமைச்சர்களிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், "அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பேட்டியளிக்க முடியாது. துறை சார்ந்த கேள்விகளாக இருந்தால் கேளுங்கள். கண்டிப்பாக தகவல் அளிக்கிறோம். மற்ற கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது" என்றார். நூற்றாண்டு விழா குறித்து மட்டும் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளிப்பார் என்று கூறியதையடுத்து சீனிவாசன் பேட்டியளித்தார். எடப்பாடி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று மக்களே சொல்கிறார்கள். 

                                

அ.தி.மு.க அரசின் அடுத்தக்கட்டமாக மக்களை சந்திக்க வரப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தினகரன் அதிரடியாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறாரே. அதை பற்றி உங்களுடைய கருத்து என்று  செய்தியாளர்கள் கேட்டபோது, 'உங்ககிட்ட எத்தனை வாட்டி சொல்றது' என்று கூறிவிட்டு அமைச்சர்கள் அவர்களது காரில் பறந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close