Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீன் வரத்தால் களைகட்டும் குளச்சல் துறைமுகம்

ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துகாக விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். வழக்கமாக 45 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் இருக்கும். ஆனால், இந்தமுறை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கு கடலில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நான்கு நாளாகிறது. மீன்பிடிக்கச் சென்ற படகுகள் தற்போது கரை திரும்பிக் கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயர்ரக மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

குளச்சல் கடற்கரைப் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இதில் அதிகமானவை குஜராத், கேரளா பகுதிகளில் தங்கி இருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்துவருகின்றன. இதர படகுகள் குளச்சல் கடல்பரப்பில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றன. குமரி மேற்கு கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகளுக்கு கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. கடந்த 1-ம் தேதி அன்று படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. தற்போது விசைப்படகுகள்  கரை திரும்பி வருகின்றன. இன்று 13 விசைப்படகுகள் கரை திரும்பின. இவற்றில் கிளிமீன், உண்ணி, நாக்கண்டம் கொழிச்சாளை மீன்கள் என சிறிய ரக மீன்கள் பாக்ஸ் பாக்ஸாக குளச்சல் துறைமுக ஏலக்கூடத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

அந்த மீன்கள் 50 ரூபாய் வரை விலை போனது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம் கணவாய் மீன் சீசன் காலமாகும். இந்த நேரத்தில் சிறிய கணவாய் மீன் முதல் பெரிய ரக கணவாய் மீன் வரை விசைப்படகு வலையில் சிக்கும். இந்த கணவாய் மீன்களுக்கு வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கடும் கிராக்கி ஏற்படும். அதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள். நல்ல லாபம் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், தற்போது கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு கணவாய் மீன் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீன்களை வாங்க கேரள வியாபாரிகள் வாகனங்களோடு குளச்சலில் குவிந்துள்ளனர். இரண்டு மாதங்களாக களை இழந்து இருந்த குளச்சல் துறைமுகம்  மீன் சந்தை களை கட்டி காணப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close