Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக 10 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் பாம்பன் கடலில் 10 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் விட்டனர்.

கடலில் விடப்படும் இறால் மீன் குஞ்சுகள்


பருவ நிலை மாறுபாடு, மாசு பெருக்கம், முறையற்ற மீன் பிடி முறை, அதிகரித்து வரும் படகுகள் எண்ணிக்கை போன்ற காரணங்களால் வங்கக் கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் இறால் மீன் வளம் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் இறால் மீன் பிடிப்பை நம்பி தொழில் செய்யும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மீனவர்களின் நலனுக்காகவும், அவர்கள் மீன்பிடி முறைகளை அதிகரிக்கும் வகையிலும் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் அவ்வப்போது மீனவர்களுக்கான பயிற்சிகள், மீன் வளர்ப்பு முறை குறித்த கருத்தரங்குகள், கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் வகையில் இறால் உள்ளிட்ட மீன் குஞ்சுகளை இனப்பெருக்கத்துக்காக விடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதன் ஒரு பகுதியாக இன்று பாம்பன் கடல் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் பூ இறால் குஞ்சுகளை இனப்பெருக்கத்துக்காக விட்டனர். இந் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி அப்துல் நாசர், ''மீனவர்களின் நலனுக்காக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் நிறுவனத்தில் 4 இனங்களைச் சேர்ந்த மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்துவருகிறோம். கோபியா, சில்வர் பம்பானோ, பூ இறால், நீல நண்டு ஆகியன இதில் அடக்கம்.

 

கடலில் விட உள்ள இறால் மீன் குஞ்சுகள் 

 குறைந்து வரும் இறால் மீன்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் அவ்வப்போது கடலில் இறால் மீன் குஞ்சுகளை விட்டு அவற்றின் இனப்பெருக்கத்தின் மூலம் மீனவர்களுக்கு அதிக இறால் மீன்கள் கிடைக்க  உதவி வருகிறோம். மீனவர்களும் எங்கள் திட்டங்களைப் புரிந்துகொண்டு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று 10 லட்சம் பூ இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. விரைவில் 10 லட்சம் நண்டு குஞ்சுகளையும் கடலில் விட உள்ளோம். இவ்வாறு கடலில் விடப்படும் மீன்குஞ்சுகள் இயற்கையான வாழ்விடங்களில் சென்று வளரும்போது அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதன்மூலம் மீனவர்கள் நன்மை பெறுவார்கள்" என்றார்.


இந்நிகழ்ச்சியில் பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் எஸ்.பி.ராயப்பன், ஜெயபிரகாஷ் மற்றும் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close