Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரோ கபடியில் இன்று எந்தெந்த அணிகள் மோதுகின்றன? #ProKabaddi

புரோ கபடி ஐந்தாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நகரத்தில் போட்டிகள் நடக்கின்றன. கடந்த வாரம் ஐதராபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடந்தன. இந்த வாரம் நாக்பூரில் மேட்ச் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. புனேரி பால்டான் அணி ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லி அணியை வென்றது. 

புரோ கபடி

இன்று நடக்கும் போட்டிகளில் யு மும்பா அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்த புரோ கபடி மேட்ச் இரவு எட்டு மணிக்கு நடக்கிறது.   யு மும்பா அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் ஐந்து புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. தபாங் டெல்லி இதுவரை மூன்று போட்டிகளில், ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் ஏழு புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இன்னொரு போட்டியில் யு பி  யோதா அணியை பெங்களூரு சந்திக்கிறது. பெங்களூரு புல்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு வெற்றிகளைப் பெற்று பத்து புள்ளிகளுடன் கெத்தாக இருக்கிறது. யு பி யோதா முதல் போட்டியில் அபாரமாக வென்றது. ஆகவே, இன்றைக்கு நடக்கும் புரோ கபடி போட்டிகள் கடும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்பது உறுதி. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close