Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி'..! கேள்வி எழுப்பிய கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மாரடைப்பால் காலமானார்..!

மிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் (60) நாகர்கோவிலில் இன்று மாலை காலமானார்.

ஹெச்.ஜி.ரசூல்

இவர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்தவர். அரசுப்பணியில் இருந்த அவர் அண்மையில்தான்  ஓய்வு பெற்றார். இவர் ஜனகனமன, என் சிறகுகள், மைலாஞ்சி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் . பின் நவீனத்துவ சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகள் பல எழுதியவர். மேலும், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

'ஆயிரம் நபிமார்கள் இருந்தும் ..

ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி '

என்ற தனது கவிதைக்காக தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகமது ஜமாஅத் தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டவர். பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர். இன்று மாலை மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது. கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மறைவுக்குப் பல்வேறு எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close