Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவில்பட்டியில் 4 நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் தேவைக்கான 2-வது பைப்லைன் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி சி.பி.எம் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலாளர் முருகன் இருந்து வந்த தொடர் உண்ணாவிரதம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் திரும்பப்பெறப்பட்டது.

unnaviratham pechuvarthai ​​​​​

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சி கோவில்பட்டி. இந்த நகராட்சியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணியிலிருந்து கோவில்பட்டிக்கு கடந்த 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒன்றாவது குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விடப்பட்டு வந்தது. குடிநீர் வரும் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு, பழுதால் அடிக்கடி குடிநீர் விநியோகம் தடைபட்டு வந்தது. 10 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த தண்ணீர் 20 நாள்களுக்கு ஒரு முறை வரை விடப்பட்டு வருகிறது.  

porattam vabas

இக்குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க, 2-வது குடிநீர் திட்டத்துக்கான அனைத்துப் பணிகளும் 18 மாதங்களில் முடிக்கப்படும் என அறிவித்து புதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் திட்டப்பணிகள் தாமதப்படுத்தப்பட்டுவருகிறது. அதைக் கண்டித்தும் தமிழக அரசைக் கண்டித்தும், இத்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மக்கள் சேவைக்கு முன்னுரிமை வழங்காத நகராட்சி ஆணையாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், இத்திட்டப்பணியில் குருமலை – ஊத்துப்பட்டி வரையுள்ள வனத்துறைக்குச் சொந்தமான 1,700 மீட்டர் தூரம் குழாய் பதிக்க வனத்துறை அனுமதி வழங்கிட வேண்டும். இத்திட்டத்துக்காக கிடப்பில் போடப்பட்டுள்ள 3 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம் கட்சியின் நகரச் செயலாளர் முருகன் கடந்த 4 நாள்களாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இன்று மாலை கோவில்பட்டி வட்டாசியர் ஜான் தேவசகாயம், வனச்சரகர் சிவராமன் மற்றும் காவல்துறையினர், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த வாரம் முதல் மீதமுள்ள குடிநீர் திட்டப்பணிகளுக்கான வேலைகள் தொடங்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முருகனின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close