Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மன்னிப்பு கோரிய கமல்; 'ஓவியா ஆர்மி' ஆன பிக்பாஸ் வீடு

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். வழக்கமாக கமல் நம் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்பாரா என்ற மன நிலையில்தான் ரசிகர்கள் வார இறுதி நாள்களில் பிக்பாஸ் பார்த்திருப்பார்கள். ஆனால், நேற்று அது மட்டுமல்லாமல், ஓவியா சிகிச்சைக்காக வெளியே வருவாரா? என தெரிந்துகொள்ள மேலும் ஆர்வத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள்.

oviya

நிகழ்ச்சி தொடங்கியதும், இரங்கல் செய்தியுடன் ஆரம்பித்தார் கமல். கடந்த வாரம் பிக் பாஸ் செட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் மரணம் குறித்த இரங்கல்தான் அது. அதன்பின்னர் நடந்தது பார்ப்பவர்களை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது. 
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல் நடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கபட்டிருந்தது. அதனை நகைச்சுவையாக கிண்டலும் கேலியுமாக போட்டியாளர்கள் செய்ய நிகழ்ச்சிக்கு வெளியே ஏகப்பட்ட விமர்சனங்கள். இதனால் நிகழ்ச்சியின் தொடக்கத்திலே அதற்கான மன்னிப்பை கேட்ட கமல், அத்தோடு நிற்காமல், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகிவிடுவேன் என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிக்பாஸ் மேடையிலே எச்சரிக்கை விடுத்தார். 

bigg boss tamil

அதன்பின்னர் நிகழ்ச்சிக்குச் சென்ற கமல், வீட்டுக்குள் நடந்ததைப் பார்வையிட்டார். ஓவியா, தான் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும் என்றும் போக வேண்டாம் என்றும் மாறி மாறிக் கூறிகொண்டே இருந்தார். இறுதியாக, பிக்பாஸ் மருத்துவ காரணங்களுக்காக ஓவியா வெளியேறுகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கு பேக் செய்ய உதவ வந்த யாரையும் ஓவியா அனுமதிக்கவில்லை. எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்வதாகக் கூறி அதைச் செய்யவும் செய்தார். அத்தனைப் போட்டியாளர்களும் ஓவியாவை வழி அனுப்ப வாசல் வரை வந்தும், யாரையும் திரும்பிக் கூட பார்க்காமல் ஓவியா வெளியேறியது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பரணி வெளியேறும்போது 'பை பரணி' என்று சொல்லிய ஓவியா யாருக்கும் 'பை' சொல்லாமல் வெளியேறினார்.

கமல்ஹாசனுடன் உரையாடலிலும் அடம்பிடிக்கும் குழந்தைபோல், ஆரவ் உடனான காதல் குறித்தே பேசினார். ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கமல் கேட்க, ஐ லவ்  யு ஆரவ் என்றே கூறினார். ஓவியா வெளியேறிய பிறகு வீட்டில் இருந்த அனைவரும் அவரை நினைத்து கலங்கியபடியே இருந்தனர்.  அந்த காட்சி, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் 'ஓவியா ஆர்மி'யில் சேர்ந்துவிட்டதுபோல் இருந்தது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close