Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜவுளித் தொழிலில் ஜாப் ஒர்க்கில் ஜிஎஸ்டி வரியை 18% ல் இருந்து 5% சதவிகிதமாக குறைத்த அருண் ஜெட்லி!


 

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி, நாட்டை இன்னமும் ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. 'இதனால், நடுத்தர, கீழ்நிலை தொழில் முனைவோர்கள் நசிந்துவிடும் சூழல் ஏற்படும்' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், அத்தகைய தொழில்கள் செய்பவர்கள். இந்த நிலையில்,தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வைத்த கோரிக்கையை ஏற்று, ஜவுளித் தொழிலில் ஜாப் ஒர்க்குக்காக மத்திய அரசு விதித்த 18 சதவிகிதம் என்ற ஜிஎஸ்டி வரியை நேற்று ஐந்து சதவிகிதமாக குறைத்து உத்தரவிட்டிருக்கிறார் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவர் அருண் ஜெட்லி. இதனால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய கரூரில் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுப்பட்டு வரும் ஸ்டீபன்பாபு,

 

 

 

 

 

 

 

 

 

 

"நாங்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி  இரானி மூலம், ஒட்டுமொத்த ஜவுளி தொழிலுக்கும் 18%, 28% என்று பல்வேறு வகையாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் அனைத்தையும், ஐந்து சதவிகிதமாக குறையுங்கள் என்று கோரிக்கை வச்சுக்கிட்டு வந்தோம். இந்நிலையில்தான், நேற்று டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியும் கலந்துகொண்டார். ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் கலந்துகொண்டாங்க. தமிழ்நாடு சார்பாக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருக்காங்க. 


 

அங்கேதான், ஜவுளித் தொழிலில் ஒரு பார்ட்டான ஜாப் ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவிகிதமாக குறைத்து உத்தரவிட்டிருக்கிறார் அருண் ஜெட்லி. ஜாப் ஒர்க்குங்கிறது தையல், எம்ப்ராய்டிங் உள்ளிட்ட கைத்தொழிலை உள்ளடக்கியது. இந்த வரி குறைப்பால் ஜவுளித் தொழிலில் ஒரு பகுதியான இந்த கைத்தொழில் செழிக்கும். அதோடு, நிறைய பேருக்கு வேலையும் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஜாப் ஒர்க்கில் செய்த வரிக்குறைப்பு எங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சிதான். ஆனால், ஜவுளித்தொழிலில் எல்லா வகைகளுக்கும் 18 சதவிகிதம் தொடங்கி 28 சதவிகிதம் வரை விதிக்கப்பட்ட வரிகள் அனைத்தையும் ஐந்து சதவிகிதமாக குறைத்தால்தான், ஜவுளித்தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் நடுத்தர, கீழ்த்தர தொழில் முனைவோர்கள் பிழைக்க முடியும். அதை மத்திய அரசு பரிசீலித்து, வரியை குறைத்து எங்களை காபந்து பண்ண வேண்டும்" என்று முடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close