Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர் மர்ம மரணம்... காவல் நிலையம் முற்றுகை!

திருச்சியில் கல்லூரி மாணவர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலியான மாணவன் ஜெர்சன்

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் ஜெர்சன்.  மாணவரான  இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

வழக்கமாக அந்தக் கல்லூயில் படிக்கும் மாணவர்களுக்கு செப்பர்ட் டிபார்ட்மென்ட் எனப்படும் துறையிலிருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை, கிராமங்களுக்குச் சென்று அங்கேயே  தங்கி மக்களின் வாழ்நிலை குறித்து தெரிந்துக்கொள்ள, மாணவர்களுக்காக 3 நாள்கள் முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டி எனும் கிராமத்தில் கடந்த இரண்டு நாள்களாக முகாம் நடைபெற்றது. திருச்சி ஜோசப் கல்லூரியின் பேராசிரியர் சரவணன் தலைமையில், சுமார் 62 கல்லூரி மாணவர்கள், அந்தக் கிராமத்தில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், இமானுவேல் ஜெர்சனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த ஜெர்சன், கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். அப்போதுதான் ஜெர்சனுக்கு நீச்சல் தெரியாது என்பது அவரின் நண்பர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் காப்பாற்ற நண்பர்கள்  போராடியுள்ளனர். 20 அடி ஆழம் உள்ள அந்தக் கிணற்றில் ஜெர்சன் மூழ்கிப்போனதால், அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஜெர்சனின் உடலை மீட்டனர்.

இந்நிலையில், தகவல் கிடைத்துச்சென்ற ஜெர்சனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மணப்பாறையை அடுத்த தோகமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் ஜெர்சனின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதி பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close