Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ வீடு முற்றுகை... பொதுமக்களை மிரட்டிய எம்.எல்.ஏ-வின் கணவர்!

குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்களை எம்.எல்.ஏ-வின் கணவர் மிரட்டியதால் திருச்சியில் பரபரப்பு உண்டாகி உள்ளது.

காலிக் குடங்களுடன் பெண்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நீர் வராததால்  அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தடுமாறிப்போனார்கள். மேலும், அந்த ஊராட்சியில் அமைந்துள்ள போர்வெல்களிலும் குடிநீர் வரவில்லை, இதுகுறித்து மண்ணச்சநல்லூர் தொகுதி  எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால்  கோபமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க மறுத்த மண்ணச்சநல்லூர்  எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனின் வீடு மற்றும் அலுவலகத்தை  200 பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் கூடங்களுடன் முற்றுகையிட்டனர்..

அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ-வின் கணவர் முருகன்,  முற்றுகையிட்ட மக்களை சந்தித்தார், அவர், கோபத்தில் பொதுமக்களை மிரட்டினார். அப்போது சத்தம் கேட்டு ஓடிவந்த எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன், தனது கணவர் முருகனை நோக்கி, ''ஏங்க என்ன பேசுறீங்க?'' என அதட்டினார்.  பின்னர், பொதுமக்களின் பிரதிநிதிகளை வீட்டுக்குள்ளே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் குடிநீர் கிடைக்க வழி செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

போராடிய மக்களை எம்.எல்.ஏ-வின் கணவன் மிரட்டிதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close