Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் சீனிவாசனுக்கு நன்றி சொன்ன ஓ.பி.எஸ்..!

O Paneer selvam

திண்டுக்கல்லில் இன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்புரத்தினம் இல்ல விழாவில் பங்கேற்க வருகை தந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் அருகில் கத்தியுடன் வந்த ஒருவர் பிடிபட்ட நிலையில் திண்டுக்கல் வந்தவர், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘‘விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது தொடர்ந்து ஒருவர் என்னிடம் புகைப்படம் எடுக்க வந்துகொண்டே இருந்தபோது தான் அவரிடம் கத்தி இருப்பதையே பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது தெரிந்துகொண்டார்கள். இச்சம்பவம் எனக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது’ என்றார்.

மேலும் ‘பங்காளிச் சண்டை’ என அமைச்சர் சீனிவாசன் குறிப்பிட்டது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘எப்படியோ சண்டை நடக்கிறது என ஒப்புக்கொண்டாரே அதற்கு முதலில் எனது நன்றிகள். பிரிந்த அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது என்றும் மூன்று அணிகளும் இணைந்து கட்சியை பலப்படுத்துவோம் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளது முற்றிலும் அவரின் சுய கருத்தாகும். கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து தினகரனிடம்தான் கேட்க வேண்டும்’ என்றும் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close