Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க-வினர் பங்கேற்க வேண்டும்…”- ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 16-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் தி.மு.க-வினர் பெறும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத வறட்சி மற்றும் வங்கிக்கடன் தொல்லையால் தமிழக விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகள் அனுபவிக்கும் துயரத்தை போக்க அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் காதுகொடுத்து கேட்கவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் வறுமையிலும், கடன் தொல்லைகளாலும் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. தமிழகத்தில் ஏறத்தாழ 24 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவேண்டும். ஆகவே, ஆகஸ்டு 16-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விவசாயிகள் நடத்தும் போராடத்தில், தி.மு.க-வினர் பெறும் திரளாக பங்கேற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close