Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“தினகரனும் அவரது புதிய நிர்வாகிகளும் கேள்விக்குறியே!”- காரணம் சொன்ன ஜெயக்குமார்

மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இந்த நிலையில் தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள் அனைவரும் கேள்விக்குறியே என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார், தினகரன்

இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி-யில் என்ன வரி குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த வரியை வசூல் செய்வதுதான் நியாயம். எல்லாப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி-யைக் காரணம் காட்டி அதிகப் பணம் வசூல் செய்வதாக புகார் வந்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரியே இல்லாத பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி விதித்து, அதற்காக போலியாக பில் தயாரித்து பொதுமக்களிடம் அதற்கான வரியை வசூல் செய்தால், நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். மேலும், தினகரன் நியமித்துள்ள நிர்வாகிகள் குறித்துப் பேசிய ஜெயக்குமார், “பொதுச்செயலாளர் நியமனம் குறித்து நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், துணைப் பொதுச் செயலாளர் யார் என்பதும் கேள்விக்குறிதான். இதனால் தினகரன் நிர்ணயித்த அனைவரும் கேள்விக்குறியே!“ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close