Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என் கணவர், பன்னீர்செல்வத்துடன் போட்டோ எடுக்கவே வந்தார்..!' கைதான சோலைராஜனின் மனைவி கண்ணீர்

'திருச்சி வந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சோலைராஜன் போட்டோ எடுக்கவே வந்தார். அவர் ஓர் அப்பாவி' என்று அவரது மனைவி  ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். 

பன்னீர்செல்வம்

சென்னையிலிருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம்மூலம் திருச்சி வந்தனர். ஒரே விமானத்தில் வந்த இவர்கள் மூவரும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் பறந்ததையடுத்து, அவரை வரவேற்கத் தொண்டர்கள் கூடினர்.

செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு அவரது காருக்குச் சென்றார், பன்னீர் செல்வம். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி, அவரை நெருங்கி வந்தார். அவரை மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தடுத்தனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரிய வர, அவரை இடுப்பில் கைவைத்து, மத்திய பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் இழுத்தபோது, அவர் இடுப்பில் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது.  உடனே அவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

சோழராஜன்

 சோலைராஜன், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர் என்றும் திருச்சி டோல்கேட் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி வேல்முருகனுடன்தான் வந்ததாகவும், இடுப்பில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்ததாகவும் கூறும் அவர், ஓ.பன்னீர் செல்வத்தைத் தாக்க வந்தாகக் கூறுவது உண்மையில்லை என்றும் கூறினார். ஆனாலும் அவர்மீது திருச்சி முன்னாள் கோட்டத்தலைவர் மனோகரன் புகார் கொடுத்தார். மேலும் ஓ.பி.எஸ், 'தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை' என்று குற்றஞ்சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து, சோலைராஜனை அழைத்து வந்த 34-வது வட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி வேல்முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த சோலைராஜனின் மனைவி ராஜேஸ்வரி, 'அடுத்த வாரம் எங்கள் மகளுக்கு திருமணம் என்பதால், கல்யாணத்துக்கு உதவி கிடைக்கும் என்றும் ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுத்தால், பேனரில் படம் போடலாம் என்றும் நினைத்தே இன்று விமான நிலையத்துக்கு சென்றார். நேற்று இரவு அவர் குடித்திருந்தார். வீட்டில் படுத்திருந்த அவரை அ.தி.மு.க கட்சிக்காரரான வேல்முருகன், 'ஓ.பி.எஸ் வருகிறார், போய்ப் பார்த்துவிட்டு வரலாம் வா' என அழைத்துச் சென்றார்.

உண்மையில் அவர் கொலைசெய்ய வரவில்லை. அப்படிப்பட்ட ஆளும் இல்லை. அவர் ரிக்‌ஷா  ஓட்டுறார். நான் வீட்டு வேலைசெய்து எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறேன். கடந்த 25 வருடமாக அவர் அ.தி.மு.க-வில் இருக்கிறார். கீழே கிடந்த கத்தியை இடுப்பில் வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். ஜெயலலிதா, ஓ.பி.எஸ் என யார் திருச்சிக்கு வந்தாலும் போய் கூட்டத்தில் கலந்துக்குவார். அவர் போட்டோ எடுத்துக்கொள்ளத்தான் வந்தார்.

அவர் கொலைசெய்ய வரவில்லை. இன்னும் 10 நாளில் எங்கள் இரண்டாவது மகளுக்குத் திருமணம் வெச்சிருக்கோம். அவர் கட்சிக்காரர்தான் என்பதற்கான ஆதாரம், மகள் திருமணப் பத்திரிகை உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்திருக்கிறோம். அவர் அப்பாவி அவரை விடச்சொல்லுங்க சார்'' என்றார். இந்நிலையில்,சோலைராஜன் மற்றும் வேல்முருகன் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும்  இன்னும் சில மணி நேரங்களில் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close