Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடியில் பரலோகமாதா விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற காமநாயக்கன்பட்டி, புனித பரலோக மாதா ஆலய 334-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

kodiyetram

பரலோக மாதா ஆலயத்தின் விண்ணேற்பு பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை பரலோக மாதாவின் பாதுகாவலரான மிக்கேல் ஆண்டகையின் திருவுருவ பவனி சப்பரத்தில் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆலயக் கொடிமரம் நடப்பட்டது. கொடிமரத்தில் முதலாவதாக ஆலயக் கொடியையும், இறைமக்கள் கொண்டு வந்த பல வண்ணக் கொடிகளும் அணிவகுப்பாக கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தின்போது, ‘’தாயே’’ என்ற குருந்தகடும், இத்தலத்தின் சிறப்பைக் கூறும் ‘’திருத்தல வரலாறு’’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.   

பரலோகமாதா ஆலயம்

கொடியேற்றத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தினமும் காலையிலும், இரவிலும் மறையுரை நடைபெறும். 12-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மரியன்னை மாநாடு திருப்பலி நடைபெறும். 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு புதுநன்மை விழாவும், 14-ம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி மற்றும் மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு ’தேரடித்திருப்பலி’ நிகழ்ச்சியும், தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரலோகமாதா நற்கருணை பவனியும் நடைபெறுகிறது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளையும், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித சூசையப்பரின் வரலாற்றையும் தமிழ் பண்பாட்டிற்கேற்ப தமிழ் இலக்கியத்தில் ‘தேம்பாவணி’ என்ற சிறப்பு பெற்ற காவியத்தையும் எழுதிய வீரமாமுனிவர் இத்தலத்தின் 7-வது பங்குத் தந்தையாக சேவைப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close