Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு வாரத்தில் இந்தியா மீது போர்: குளோபல் டைம்ஸ் தகவல்

டோக்லா பகுதியிலிருந்து துருப்புகளை வாபஸ் பெறவில்லை என்றால், இந்தியா மீது சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கை எடுக்க சீனா முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய ராணுவத்துடன் போர்

சீன அரசின் 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,''டோக்லா விவகாரத்தில் சீனா பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளது. இந்தியாவோ பொறுப்பில்லாமல் போர் ஏற்படுத்துவதற்காக சூழலை ஏற்படுத்துகிறது. போர் ஏற்பட்டால், அதை நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை. அதிக சக்திகொண்ட சர்வ வல்லமை படைத்த ஒரு நாட்டுடன்  இந்தியா மோதிக்கொண்டிருக்கிறது 

தெற்காசிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதுபோல, சீனா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்த நினைக்க வேண்டாம். சீன ராணுவம் அதிக சக்தி வாய்ந்தது. இந்தியாவின் எந்த இலக்கையும் தாக்கும் சக்தி எங்களுக்கு உண்டு. டோக்லா எல்லையில் நிற்கும் இந்தியத் துருப்புகளை அகற்றுவது எங்களுக்குப் பெரிய விஷயமே இல்லை. அவர்களை நாங்கள் போட்டியாகவே கருதவில்லை. இந்திய அரசு, சர்வதேச விதிகளை மதிக்காமல், தன் நாட்டு மக்களின் நல்வாழ்வு பற்றியும் யோசிக்காமல், போர் பற்றி சிந்திக்கிறது. அமைதி வேண்டும் என்பதற்காகவே, சீனா பொறுமையைக் கடைப்பிடிக்கிறது. போர் உருவானால் முடிவு எங்கள் கையினால்தான். சீன ராணுவம் போர் புரியத் தயார் நிலையிலேயே உள்ளது. அமைதியை விரும்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது'' எனக் கூறியுள்ளது. 

இரண்டு வாரத்தில் டோக்லா பகுதியில் உள்ள இந்தியப் படைகள்மீது சிறிய அளவிலான தாக்குதலை நடத்த சீனா முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில், இந்திய-சீன எல்லையில், பூடானில் உள்ள டோக்லா பகுதியில் சீன ராணுவத்தின்  சாலை அமைக்கும் பணியை  இந்தியத் துருப்புகள் தடுத்தன. அப்போதிருந்தே இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவி வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close