Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வலுவான நிலையில் இங்கிலாந்து!- தொடரை இழக்குமா தென் ஆப்ரிக்கா ? #ENGvsSA

இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. மான்செஸ்டரில் நடந்துவரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 362 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 99 ரன்னில் அவுட் ஆனார். தென் ஆப்ரிக்க அணி சார்பில் ககிசோ ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. அந்த அணியில் ஒருவர்கூட அரை சதம் அடிக்கவில்லை. அதிகபட்சம் தெம்பா பவுமா மட்டுமே 46 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி வெறும் 226 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 136 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் ஜோ ரூட் 49 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். 

இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா

ரபாடா மற்றும் ஆலிவர் பந்துகளை சமாளிக்க  இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்  ரொம்பவே திணறினார்கள். மொயின் அலி மட்டும் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் எட்டு பௌண்டரி, மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 67 ரன்கள் குவித்திருக்கிறார். இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்திருக்கிறது. இப்போதைக்கு 360 ரன்கள் முன்னிலையோடு இருக்கிறது இங்கிலாந்து அணி. 

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மிச்சம் இருக்கிறது. மொயின் அலி களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணி இன்னும் நாற்பது ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு நானூறு ரன்களை இலக்காக வைக்கும் பட்சத்தில் தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு மங்கிவிடும். இந்த டெஸ்ட் போட்டியை இழந்தாலோ அல்லது டிரா செய்தாலோ டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை ஏற்படும் என்பதால் வெற்றிப்பெற தென் ஆப்ரிக்கா முயலும். அந்த வகையில் அணுகும்போது இந்த இரண்டு நாள்கள் அனல் பறக்கும் டெஸ்ட் மேட்ச் இருக்கிறது என நம்பலாம். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close