Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலம் சீஸன் ஓ.கே! கும்பாவுருட்டி, பாலருவி மூடல்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. அதேசமயம் அருகில் உள்ள கேரளாவின் கும்பாவுருட்டி, பாலருவி அருவிகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குற்றாலம் மெயின் அருவி

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாகப் பெய்துவரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் விழத்தொடங்கி இருக்கிறது. குற்றாலத்தில் சாரல் இல்லாத நிலையிலும் அருவிகளில் கொட்டும் நீரில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

குற்றாலத்துக்கு வரக்கூடிய பயணிகள், அருகில் உள்ள கேரள மாநிலத்தின் ஆரியங்காவு பகுதியின் பாலருவிக்குச் சென்று குளிப்பது வழக்கம். உயரத்தில் இருந்து கொட்டும் பாலருவியில் குளிப்பது புத்துணர்வை ஏற்படுத்தும். இதமான சீதோஷ்ண நிலையும் அங்கு நீலவுவதால், குற்றாலத்தின் மூலிகை நீரில் குளித்துவிட்டு சுற்றுலாப் பயணிகளின் அடுத்த தேடல் பாலருவியாகவே இருக்கும். அத்துடன், அச்சன்கோவில் அருகில் இருக்கும் கும்பாவுருட்டி அருவிக்கும் பயணிகள் செல்வார்கள்.

பாலருவி

கும்பாவுருட்டி அருவி கடந்த இரு வாரங்களுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. அங்கு குறைவான தண்ணீரே விழுவதால், அருவியை வனத்துறையினர் மூடிவிட்டனர். அதனால் பாலருவிக்குச் சென்றுவந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலருவி சென்ற தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில், தமிழகப் பயணிகள் அடித்து விரட்டப்பட்டனர். இது சர்ச்சையைக் கிளப்பியதால், இரு தினங்களுக்கு அருவியை மூட வனத்துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், பாலருவில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களை வனத்துறையில் நிரந்தரப் பணியில் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அதிலும், உள்ளூர் நபர்களுக்கு வனத்துறையில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்காலிக பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அருவிக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் குளறுபடி ஏற்படும் நிலைமை உருவானது. இதையடுத்து பாலருவியை காலவரையின்றி மூடுவதாக வனத்துறை அறிவித்தது. 

பாலருவி, கும்பாவுருட்டி அருவிகள் மூடப்பட்டதால் குற்றாலத்துக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close